Monday, June 9, 2008

வலியின் எண்ணிக்கை

கவனமின்றி
நகம் வெட்டியதில்
வலியுடன் அறிந்தது
வலக்கை சுண்டுவிரலை
எதற்கெல்லாம்
எத்தனைமுறை
உபயோகித்தேன் என்று.
கொஞ்சம் யோசித்ததில்
பள்ளிப்பருவம் என்றால்
இன்னுமிருமுறை
கூடி இருக்குமென்று தெரிந்தது.
கடைக்குட்டிகளுக்கான
சலுகைகளும் புரிந்தது
கட்டை விரல் தப்பித்ததில்
ஆறுதலும் வந்தது
பக்கத்து விரல்கள்
விலகியே இருக்க
மற்ற ஐந்து விரல்கள்
வருடிக் கொடுத்தன
அனிச்சையாக அவ்வப்போது

3 comments:

ரமேஷ் வைத்யா said...

nallaa irukku.

அகரம்.அமுதா said...

//பக்கத்து விரல்கள்
விலகியே இருக்க
மற்ற ஐந்து விரல்கள்
வருடிக் கொடுத்தன//

அருமை

அனுஜன்யா said...

நன்றி ரமேஷ் மற்றும் அமுதா.